திருப்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

55பார்த்தது
திருப்பூர் திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கொங்கு ஏழு சிவாலயங்களில் நடுத்தலமாகவும் மனநோய் தீர்க்கும் தலமாக விளங்கும் திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ரத வீதிகளில் அரோகரா கோஷத்தோடு ஊர்வலமாக சுற்றி வந்து திருக்கோயிலை அடைந்து சண்முகநாதருக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை கடனை செலுத்தினர். 

அதேபோல் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து திருமுருகன் நாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி