வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 261 இன்னிங்ஸில் இச்சாதனை அவர் நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். சச்சின் தனது 276-வது இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்தார். இப்பட்டியலில், 222 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.