திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஆகாசராயர் திருக்கோவில் மற்றும் காத்தவராயர் திருக்கோவில் சுமார் 90 செந்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கடந்த 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இக்கோவில் 1990 ஆம் ஆண்டு இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கும்பாபிஷேகம், வேலையாட்டி, பராமரிப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்னரே கோவிலைச் சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்து அறநிலைத்துறைக்குள் நுழைந்து தவறான வழிகாட்டுதலின் பேரில் தற்போது மண்டபத்திற்கும் கோவிலுக்கும் நடுவே எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லாமல் தடுப்புச் சுவர் கட்டியுள்ளனர். இதனால் விழாக் காலங்களில் கூட்டம் தெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படுவார்கள். ஒரு சமூகத்தினர் மட்டும் இப்படிச் சுவர் எழுப்புவதால் கோவிலைச் சேர்ந்த மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இந்து அறநிலைத்துறை இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழிகாட்டுதலின்படி போராட்டம் நடத்தப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் பழ. சண்முகம் கூறினார்.