
மணப்பாறை தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சேத்துப்பட்டு அருகில் நேற்று பிற்பகல் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சய் கணேஷ் என்பவர் தனது சொந்த வேலை காரணமாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பக்க டயர் வெடித்ததில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. காரை ஓட்டிச் சென்ற சஞ்சய் கணேஷ் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.