ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

68பார்த்தது
இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுவது ரம்ஜான் மாதமாகும், இந்த பண்டிகை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் 30நாள் நோன்பு இருந்து சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதமாக நோன்பு திறக்கும் நிகழ்வு அனைத்து இஸ்லாமியர் அமைப்பினரும் நடத்தி வந்தனர். தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு
இஸ்லாமியர்கள் புனித பண்டிகையாக ரமலானை கொண்டாடி வருகிறார்கள்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி முதர்ஷா பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுராஜா தலைமையில் ரம்ஜான் சிறப்பு
தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி