திருச்சி என். ஆர். ஐ. ஏ. எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா

77பார்த்தது
திருச்சி என். ஆர். ஐ. ஏ. எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா
திருச்சி கே. கள்ளிக்குடி என். ஆர். ஐ. ஏ. எஸ். அகாடமியில் நேற்று 48வது வெற்றி விழா நடைபெற்றது. விழாவுக்கு என். ஆர். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் படிக்க உறுதுணையாக இருந்த பெற்றோர்களை பாராட்டினார். மேலும் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி பெற்றுக்கொண்டார். விழாவில் வீட்டு வசதி வாரியத்தில் இளநிலை உதவியாளராக குரூப் 4 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்த திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜய் மனைவி சுதா மற்றும் அவரது குடும்பத்தினரை அகாடமி தலைவர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். விழாவில் சுதாவின் கணவர் விஜய் பேசும்போது, எங்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. நாங்கள் 2 பேரும் எம் எஸ் சி பி. எட். பட்டம் முடித்துள்ளோம். பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு என். ஆர்.ஐ. ஏ எஸ் அகாடமியில் போட்டி தேர்வு பயிற்சிக்கு சேர்ந்தோம். எனது மகன் ஒன்றரை வயது இருக்கும் போது விடுதியில் தங்கிப் படிக்க வந்தோம். கடின உழைப்பினால் இன்றைக்கு எனது மனைவி பணிக்கு சேர்ந்துள்ளார். நானும் குரூப் 4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பணி ஆணைக்காக காத்திருக்கின்றேன். என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி