சமயபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

52பார்த்தது
சமயபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்வரோடு அருகில் நேற்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர் மோர் பந்தலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு, நீர் மோர், இளநீர், தர்பூசணி போன்ற பல வகை உணவுகளை வழங்கினார். மேலும் இப்பகுதியில் தினமும் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் நீர்மோர் வழங்க அப்பகுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சமயபுரம் நகரக் கழக செயலாளர் சம்பத் அவர்கள் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி