தொட்டியம் வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

76பார்த்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்புதொட்டியம் அக்ரஹாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு இன்று காலை நடைபெற்றது. அதிகாலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் எழுப்பிபக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதில் தொட்டியம் அதனைச் சுற்றி உள்ள பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி