சமயபுரம்: கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

74பார்த்தது
திருச்சி சமயபுரம் அருகே வகுப்பறையில் செல்போனில் வீடியோ எடுத்த மாணவனை கண்டித்த கல்லூரி பேராசிரியை. மனமுடைந்த மாணவன் கல்லூரி 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கல்லூரி மாணவர்களுக்கிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்ட மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்த தரணிதரன் இவர் சமயபுரம் கே. ராமகிருஷ்ணா கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் பேராசிரியை டேட்டா என்ட்ரி பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது தரணிதரன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நண்பன் டேட்டா என்ட்ரி தவறாக செய்ததாகவும் இதனை பார்த்த பேராசிரியை அந்த மாணவனை அடித்து கண்டித்ததாகவும் இதனை பின் இருக்கையில் இருந்த தரணிதரன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பேராசிரியர் தரணிதரனை திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நான்காவது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தரணிதரன் இருங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் இது குறித்து சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி