நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோ.தமிழரசன் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக உங்களின் பேச்சும், செயலும் தமிழ் தேசிய கருத்துக்களுக்கு முரணாக உள்ளது. பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து, கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். தங்களின் செயல்கள் எனக்கு மன வேதனையை தருகிறது" என்றார்.