முசிறியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். 

அப்போது தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 அப்போது வரும் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி