தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது காற்று மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால், தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசிசெலுத்திக் கொள்வது அவசியமாகும். குழந்தைகளுக்கு மட்டுமே இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி இருக்கிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் இதை ஆறு மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர் முகமது முக்தார் விளக்கம் அளித்துள்ளார்.