குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகும் காய்ச்சல் வருவது சகஜமே. ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச வீரியத்துடன் இருக்கும் வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசி உருவாக்கப்பட்டு செலுத்தப்படுகிறது. ஆனால் பல்வேறு விதமான வைரஸ்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தடுப்பூசியை தவிர்க்காமல் செலுத்துக் கொள்ள வேண்டும்.