திருச்சி: பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேர் கைது

69பார்த்தது
திருச்சி: பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேர் கைது
திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா சம்பவம் நடந்த நேற்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி பாலக்கரைக்குச் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த செல்போனை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சித்ரா கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விஜய், நாகராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி