ஹவுரா ரயிலில் அன்-ரிசர்வ் பெட்டிகள் மாற்றப்பட்டதால் பரபரப்பு

53பார்த்தது
திருச்சியில் இருந்து ஹவுரா செல்லக்கூடிய ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. அதற்கு முன்பு 1 மணி அளவில் ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக பயணிகள் முன் வந்தனர். அப்போது அன் ரிசர்வ்டு பெட்டியில் பயணிகள் இடம்பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு இடத்தைப் பிடித்தனர்.

அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரு பெட்டி மட்டும்தான் அன் ரிசர்வ்டு பெட்டி எனவும் ஒரு பெட்டியில் இருந்து அனைவரையும் இறங்குமாறு அறிவுறுத்தினர்.

வழக்கமாக இரண்டு பெட்டிகள் அண் ரிசர்வ்டு இருக்கும்
ஆனால் இன்று ஒரு பெட்டி மட்டும்தான் அன் ரிசர்வ்டு என உள்ளது, மற்ற பெட்டிகளில் ஏறக்கூடாது என திடீரென ஒரு அறிவிப்பு ஒன்றை ரயில்வே சார்பில் ஒட்டப்பட்டது.


அதாவது திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடந்த சாரணர் விழாவில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பயணம் செய்வதற்காக இரண்டு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் ஒட்டப்பட்டு இருந்தது. முன்னறிவிப்பு இன்றி அன் ரிசர்வ் பெட்டிகள் மாற்ற பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி