'மைக் புலிகேசி' என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, திருச்சி டிஐஜி வருண்குமார் விமர்சித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் இன்று (பிப்., 19) ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'சீமான் மீதான வழக்கை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏப்ரல் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். நான் எனது மனைவியை பிரியவுள்ளதாக அவதூறு பரப்புகிறார் சீமான். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவுதான்' என சாடினார்.