பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து உத்தரப்பிரதேசம், சண்டிகாரில் போராடும் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், நிர்வாகி ஆலயமணி, தமிழ்நாடு எம்ப்ளாயிஸ் ஃபெடரேஷன் மாவட்ட செயலாளர் சிவச்செல்வன், தமிழ்நாடு மின்வாரிய இன்ஜினியர் சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன், டிஎன்பி இஓ மாநில துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷன் வட்டத் தலைவர் பெருமாள், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் பேசினர். இதில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.