லால்குடி: வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை

77பார்த்தது
லால்குடி: வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் வயது 40 திருமணம் ஆகாதவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில் வலி குணமாகாததால் மன உளைச்சலில் இருந்தார். 

இதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 15) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மதன்குமாரின் தாய் தர்மாம்பாள் அளித்த புகாரின் பேரில் மதன்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி