திருச்சி: போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கிய அமைச்சர்

52பார்த்தது
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை பரிசளித்துப் பாராட்டினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

அதன்படி இளைஞர் இலக்கிய விழா போட்டிகளில் வென்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ. 2,40,000 வழங்கப்பட்டது. தொடர்ந்து, புரவலர்களையும் அமைச்சர் கௌரவித்தார். நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், நூலகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி