கர்நாடகா: மைசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி நேற்று (பிப். 18) தற்கொலை செய்து கொண்டனர். இறந்தவர்கள் ஜோபி ஆண்டனி - ஷர்மிளா என அடையாளம் காணப்பட்டனர். இவர்களின் தற்கொலைக்கு முந்தைய நாள் ஜோபியின் சகோதரர் ஜோஷி தற்கொலை செய்தார். அவர் பதிவு செய்த வீடியோவில் ஜோபி ரூ.80 லட்சம் கடன் வாங்கிய நிலையில் கடன் கொடுத்தவர்கள் தன்னையும் மிரட்டியதாக குறிப்பிட்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.