திருச்சி, புத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ வேலன் சீட் பிரைவேட் லிமிடெட் எனும் சீட் கம்பெனியில் அதன் உரிமையாளர் பசுபதி என்பவரிடம், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சீட்டு கம்பெனியில் சேர்ந்தால் லாபம் பெறலாம் என்ற வார்த்தையை நம்பி ஒவ்வொரு மாதம் தவணையாக 20 மாத தவணைகள் வரை கட்டியுள்ளனர்.
இந்நிலையில் தரவேண்டிய பணத்தை சீட்டு கம்பெனி தராமல் இழுத்தடிப்பதாகவும், அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து தங்களின் பணத்தை அவர்களிடமிருந்து பெற்று தர வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்