துறையூர்அருகே உள்ள சர்பிடி தியாகராஜர் நகரில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர் மற்றும் அவரது மனைவி பொன்மலர் செம்மறி ஆடுகளை பட்டியிட்டு மேய்த்து வருகின்றனர். ராமர் ஆடுகளை
மேச்சலுக்கு ஒட்டி சென்ற நிலையில் தனியாக இருந்த ராமர் மனைவி பொன்மலர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி அவர் அணிந்திருந்த ஒன்பது சவரன் நகையை பறித்து சென்றனர். பட்டப் பகலில் குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த சம்பவம் குறித்து துறையூர் காவல் நிலையத்தில் பொன்மலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்