திருச்சி நீதிமன்றத்தில் இன்று எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் ஆஜர்

78பார்த்தது
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி. மு. க. சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சி அலுவலகத்தில இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் கூட்டியதாக பறக்கும் படை கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இனிகோ இருதயராஜ் மீது காந்தி மார்க்கெட் காவல்துறை 2வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் 1-வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோஇருதயராஜ் நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு
ஆஜரானார். தொடர்ந்து வழக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்

நீதிமன்றத்தில் ஆஜராக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோஇருதயராஜ் திமுக உறுப்பினர்கள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரண்டு வந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி