திருச்சி: சாதாரணக் கட்டணத்தில் கூடுதல் விமானச் சேவை; துரை வைகோ

68பார்த்தது
திருச்சி: சாதாரணக் கட்டணத்தில் கூடுதல் விமானச் சேவை;  துரை வைகோ
திருச்சி எம்பி துரை வைகோ வெளியிட்ட அறிக்கை:வாழ்வாதாரத்திற்காக தமிழக இளைஞர்களில் பலர் வளைகுடா, அமீரக அரபு நாடுகளுக்குச் செல்கின்றனர். திருச்சியிலிருந்து அமீரகத்திற்கு நேரடி விமானச் சேவை இருந்தாலும் அது தேவையை பூர்த்தி செய்யவில்லை. மேலும் அதற்கான பயணக் கட்டணமும் அதிகம். எனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்தைத் ஏற்படுத்தவும், அதற்கு சாதாரண கட்டணத்தை உறுதி செய்யவும் வேண்டும்.திருச்சியிலிருந்து பக்ரைனுக்கு விமானச் சேவை வழங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தயாராக இருக்கும் நிலையில், அதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்.

மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியின் முதல் உள்நாட்டுப் போக்குவரத்து சேவையாக திருச்சி - சென்னை இரு வழித்தட சேவை மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து தொடங்குவது பாராட்டுக்குரியது. தில்லிக்கும் (ஹிண்டன்) அதே தேதியில் சேவை அளிக்கப்படுகிறது.திருச்சி - ஹைதராபாத், திருச்சி - பெங்களூர் ஆகிய வழித்தடத்தில் இண்டிகோ விமான சேவை இருந்தாலும் பெரும்பாலும் பயணச்சீட்டு கிடைப்பதில்லை. 

அதே நேரம் திருச்சி- தில்லி, திருச்சி - கொச்சின், திருச்சி - கோவா ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்க வேண்டும். மேலும் திருச்சி - யாழ்ப்பாணம், திருச்சி - கொழும்பு சேவையையும் தொடங்கவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி