பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது இதனையொட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே வடுவூர் கிராமத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா பெண்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனை வழங்கினார்.