இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தும் ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் சென்றது. வடகிழக்கு பருவ மழை பெஞ்ஜல் புயல், அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவற்றால் தொடர்ந்து மழை பொழிவு அதிகரித்து நன்னிலம் பகுதியில் நீர்நிலைகளில் மழை நீர் நிரம்பி ஊருக்குள் புகுந்த நிலையில் வயல்களிலும் தண்ணீர் நிரம்பியது தற்போது வயல்களில் தேங்கிய மழை நீர் வாய்க்கால்கள் மூலம் ஆறுகளை வந்தடைவதால் நன்னிலம் பகுதியில்வெட்டாறு, வளப்பாறு, கோரையாறு திருமலைராஜன் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ரசித்து செல்கின்றனர்.