வலங்கைமான் பகுதிகளில் புதிய அங்காடி கட்டிடங்களை நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலை அங்காடி கட்டிடங்களை இன்று திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
வலங்கைமான் பகுதி தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி பகுதியில் சுமார் 14 லட்சம் மதிப்பீட்டிலும், விருப்பாச்சிபுரம் பகுதியில் 12.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலத்தூர் ஊராட்சி பகுதியில் 12 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய அங்காடி கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.