காடுவெட்டியில் பழுத்தடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டுகோள்

53பார்த்தது
கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டி கிராமத்தில் உள்ளது காயிதே மில்லத் தெரு. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது பெய்து வரும் தொடர்மழையால் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. 

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே துறைசார்ந்த அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக அமைத்துதர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி