திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது மகள் ஐஸ்வர்யா பிரீத்தா மருமகன் பூபதி உள்ளிட்ட ஆறு பேருடன் சொகுசு காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு இன்று மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் வாகனத்தை பூபதி ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் மன்னார்குடி அருகே காலாஞ்சேரி என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த பூபதி அசதியில் கண் அசந்து நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.