நீடாமங்கலத்தில் டீசலை குடித்தவர் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவர் அருகிலுள்ள வீட்டிற்கு சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்ததால் அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீர் என நினைத்து எடுத்து குடித்துள்ளார். இதனால் ஏழுமலை வலியால் துடித்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.