பூவனூர் சதுரங்க வல்லப நாதர் கோவிலில் சூர சம்கார விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பூவனூரில் சதுரங்க வல்லப நாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சுப்ரமணிய சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உல நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நேற்று மாலை பூவனூரில் நடைபெற்றது. ஆட்டுகிடாய் வாகனத்தில் முருக பெருமான் சிறப்புப் அலங்காரத்தில் எழுந்தாருளி பக்தர்களுக்கு காட்சியாளித்தார். பின்னர் கற்பகவள்ளி தாயாரிடம் முருகன் வேல் வாங்கிக்கொண்டு சூரணை வதம் செய்ய புறப்பட்டார். கோவிலின் நான்கு வீதிகளில் வளம் வந்த முருகபெருமான் யானை, சிம்மம், மயில், மரம் என தோன்றிய சூரணை வேல் கொண்டு வதம் செய்த நிகழ்வை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர். பின்னர் மயில் வாகனத்தில் வள்ளி , தெய்வானை சமேதராக எழுந்தருளிய முருகபெருமானுக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டு வீதி உலா நடைபெற்றது.