திருவாருரில் மருந்தாளுனரை மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை

79பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் தலைமை மருந்தாளுநர் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டிய நன்னிலம் காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனையில் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தலைமை மருந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏழாம் தேதி மாலை நேரத்தில் நன்னிலம் காவல் நிலைய காவலர் ரத்தினவேல் கருணாநிதி என்பவர் தியாகராஜன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அப்போது ஏன் வந்தாய் என தியாகராஜன் கேட்க பிறகு மௌனமாக ரத்னவேல் கருணாநிதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு எட்டாம் தேதி காலை நேரத்தில் ரத்தினவேல் கருணாநிதி தியாகராஜனை வழிமறித்து மிரட்டியும் திட்டியும் உள்ளார்.

இந்த நிலையில் தியாகராஜன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகார் குறித்து உண்மை தன்மை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ரத்தினவேல் கருணாநிதியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி