லாயம் கிராமத்தில் 100 நாள் வேலையால் விவசாயம் பாதிப்பு

53பார்த்தது
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி விவசாய தொழிலாளர்கள் பயன் பெற்றாலும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் விவசாய பணி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வலங்கைமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது நடவு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு 100 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அப்பகுதி விவசாய தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்று விடுவதால் நடவு பணி பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் விவசாய பணிக்கு வராததால் வட மாநிலத்தவரை கொண்டு நடவு செய்யும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து வலங்கைமான் லாயம் பகுதியில் உள்ள பிரபு என்ற விவசாயி சொல்லும் போது.
"உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்று விடுவதால் நடவு சீசனில் விவசாய பணிக்கு ஆள் கிடைப்பதில்லை இதனால் நடவு பணி பாதியிலேயே நிற்கிறது. வடமாநிலத்தவர் செய்யும் வேலை சரியாக இல்லை என்றும்100 நாள் வேலையை மாற்றி அமைக்க BDO-விடம் கோரிக்கை வைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் விவசாய பணி இல்லாத நேரத்தில் 100 நாள் வேலையை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி