நன்னிலம் அருகே 24 மணி நேரமும் டாஸ்மாக் மது விற்பனை

83பார்த்தது
நன்னிலம் அருகே 24 மணி நேரமும் டாஸ்மாக் மது விற்பனை விடியற்காலையில் அலைமோதும் மது பிரியர்கள்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வீதிவிடங்கன் அரசு மதுபான கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக பகல் 12: 00 மணிக்கு டாஸ்மாக் மது கடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால்
வீதி விதங்கள் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில். இரவு கடை மூடிய பின் எந்த நேரமும் மது விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இங்கு விடியற்காலை முதல் நண்பகல் 12 மணிக்கு மதுபான கடை திறக்கும் வரையிலும் இரவு முதல் எந்த நேரத்திலும். கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் தாராளமாக மதுபானம் கிடைப்பதால். ‌ மது பிரியர்கள் அலை மோதுகின்றனர்.
விடியா தி மு க அரசில் டாஸ்மாக் மதுக்கடையில். 24 மணி நேர மது விற்பனையும். அனைத்து இடங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படும் அவல நிலை உள்ளதாகவும். இதனால் பல குடும்பங்கள் சீரழிவதாகவும். சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி