நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஐயப்பன். மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி தனது மகள் மற்றும் மகனுடன் திருவாரூரில் வசித்து வருகிறார். நேற்று தனது தந்தையை பார்பதற்காக மகள் மாப்பிள்ளைக்குப்பத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது குடிபோதையில் இருந்த தந்தை ஐயப்பன் மகளென்றும் பாராமல் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதை சிறுமி தாயிடம் கூறினால் அதன் பேரில் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஐயப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.