நன்னிலம் அருகே செயல் அலுவலரை முற்றுகையிட்ட சிவனடியார்கள்..

68பார்த்தது
திருகொல்லம்புதூரில் வெங்கடேஸ்வரர் ஆலயம் உள்ளது.
திருஞானசம்பந்தர் கொள்ளம் பூதூருக்கு வந்து முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. முல்ளியாற்றை கடக்க ஓடத்தை செலுத்த முடியாததால் ஓடக்காரர்கள் தங்கள்ஓடங்களை கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர. அங்கு வந்த திருஞானசம்பந்தர், ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறு கரையை அடைந்தார். எனவும் அப்பொழுது இறைவன் காட்சி தந்ததாகவும் இறைவனை போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். இந்த நிகழ்வை போற்றும் விதமாக இத்தலத்தில் 'ஓடத் திருவிழா ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது ஆற்றில் நீர் இல்லை என்றும் ஓடம் பழுதடைந்த நிலையில் உள்ளது என்றும் பல காரணங்களை கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடத் திருவிழாவினை கோவில் நிர்வாகம் நடத்தவில்லை. இதுகுறித்து திருக்கோயிலின் செயல் அலுவலரிடம் கேட்டபோது நாங்கள் ஓடம் சரி செய்து வைத்துள்ளோம், தண்ணீர் இல்லை எனவும் தகவல் அளித்துள்ளார். ஆனால் ஓடம் சரிசெய்யப்படாமல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் ஆற்று நீர் இல்லை என்று கூறி ஓடத் திருவிழாவை கோவில் நிர்வாகத்தினர் செயல்படுத்திபதாமல் உள்ளனர். திருவிழா நடப்பதற்கு ஏதுவாக எவ்வித நடவடிக்கையும் கோவில் நிர்வாகம் சார்பாக முயற்சி எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி