தலைமுடி அழகாக இருக்க அதன் பராமரிப்பு குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டாயம் அறியவேண்டும். இரவில் தலையைக் கழுவினால் முடி சீக்கிரம் வறண்டு போகாது. ஈரமான முடியுடன் சிலர் தூங்கச் செல்கின்றனர். உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை அதிகரிக்கும், இது நிகழும்போது, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் பிரச்சனையும் அதிகரிக்கிறது.