முன்னாள் ஐ. ஜி பொன்மாணிக்கவேல் குடவாசல் போலீஸிடம் புகார்

79பார்த்தது
குடவாசல் வட்டம், தீபங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த தீபநாயகர் சமண கோயில் உள்ளது. கடந்த 2003ம் தீப நாயகர் சுவாமியின் செப்புதிருமேனி சிலை திருடுபோய் உள்ளது. இது தொடர்பாக முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ. ஜி. பொண்மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அவர் பேசுகையில் இந்த சிலை தற்சமயம் நியூயார்க்கில் ராஜு சவுத்ரி என்ற கலைப் பொருட்கள் விற்பனையாளர் (ANTIQUITY DEALER) மூலம் விற்கப்பட உள்ளது. இந்த சிலை கடத்தப்பட்ட போது சோழர் காலத்து சிலைதானா? என்பதை ஆராய்ந்து, அதில் உள்ள தடயங்களை அழிப்பதற்காக அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற பிலிப்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்சமயம் அந்த சிலையானது 3. 35 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பின்படி இதன் விலை ரூ. 2. 54 கோடி ஆகும். இது தொடர்பாக நான் அப்போதே வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தேன். எனது பனிக்காலம் அதற்குள் முடிந்து விட்ட நிலையில் குடவாசல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக புகார் அளித்துள்ளேன். இந்த புகாரின் அடிப்படையில் குடவாசல் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைப்பார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி