மன்னார்குடி வடசேரி சாலையில் திருவாரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து அங்கிருந்த நூல்களை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திமுக மன்னார்குடி நகர செயலாளர் வீரா கணேசன், நகர மன்ற தலைவர் மன்னைசோழராஜன் திமுக மூத்த நிர்வாகிகள்
திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி. கே. முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.