போக்சோ வழக்கில் அ. தி. மு. க ஐடி விங்க் நிர்வாகி கைது

65பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த தீபன் (33), இவர், அ. தி. மு. க. , தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இவர், 12 ஆம் வகுப்பு படிக்கும் 17வயது சிறுமி ஒருவரை, தொடர்ந்து கிண்டல் செய்து, பாலியல் ரீதியாக தொட்டு, தகாத முறையில் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை, சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்து மீண்டும் கிண்டல் செய்து, பாலியல் ரீதியாக தகாத முறையில் பேசி நடந்து கொண்டுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி திங்கள் இரவு, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை தீபனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி