பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாத சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், 15 அரசு மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.26.62 கோடி மதிப்பீட்டில் ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.