மன்னையில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
மன்னார்குடி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 19ஆவது பொதுகுழு கூட்டம் சித்தாம்பூர் திருமண அரங்கில் இன்று(நவம்பர்.24) நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஜெயக்குமார், செயலாளார் அறிவு பொருளாளர் நீலகண்டன் மற்றும் லாரி சங்க நிறுவாகிகள் பங்கேற்று லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.