மன்னார்குடி நகரத்தில் விட்டுவிட்டு பெய்யும் தொடர் மழையால் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம், மக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகிறார்கள். பள்ளம் மேடு தெரியாமல் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. மழை நீர் வெளியேறாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். தண்ணீர் ஓடுவதற்கான வழியை ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.