திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கத் தொடங்கியது. காஞ்சி குடிக்காடு கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இன்று வரை சரியாக நீர் வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் வடிய துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.