மன்னார்குடியில் மது போதையில் அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தம்பி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மதுக்கூர் சாலையை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது சகோதரர் அசோக்குமார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சகோதரர்கள் இருவரும் தின கூலியாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அசோக்குமார், ராஜாராஜன் இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தம்பி அசோக்குமார் கீழே விழுந்த போது தரையில் உடைந்து கிடந்த மது பாட்டில் குத்தியத்தில் பலத்த காயமடைந்து ரெத்த வெள்ளத்தில் அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அண்ணன் ராஜராஜசோழன் மது போதையில் இருந்துள்ளார். வீட்டின் அருகே இருந்தவர் வந்து பார்த்த போது அசோக் குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார்
ராஜராஜசோழனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.