மன்னையில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் மருத்துவமனைக்கு தானம்

50பார்த்தது
மன்னார்குடியில் உடல் தானம் செய்த மூத்தாட்டியின் உடல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி மருது பாண்டியர் தெருவை சேர்ந்த அப்பாத்துறை ஆனந்தம் தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் தனது தங்கையின் மகள் குகேஸ்வரிரை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாத்துறை உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் குகேஸ்வரி மூதாட்டி ஆனந்தத்தை பராமரித்து பார்த்துகொண்டார். இந்நிலையில் தான் இறந்தால் தனது உடலை மருத்துவ மாணவர்களின் கல்விக்கு பயன்படும் வகையில் உடல் தானம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு 74வயதான மூதாட்டி ஆனந்தம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். மூதாட்டி ஆனந்தத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உறவினர்கள் ஆனந்தத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைப்பதற்க்காக நேசக்கரம் பொதுநல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி