மன்னார்குடி மந்தக்கார தெருவை சேர்ந்தவர்கள் அசோக்குமார், பரமேஸ்வரி இவர்களுக்கு அருணநாதனி என்ற மகள் உள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தந்தை அசோக்குமாருக்கு கிட்னி பாதித்து உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனை க்கு சிகிச்சைக்கு சென்ற போது இன்னும் சில நாட்களே அசோக்குமாரஉயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்நிலையில் மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். இன்று காலை அருண நாதனியின் தோழி அவருக்கு பலமுறை போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டில் வந்து பார்த்த போது அருணநாதனி எலி மருந்து தின்று உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் அருணா நாதனின் தாய் மற்றும் தந்தை இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயிரிழந்த அருண நாதனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசோக்குமார் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மனைவி திருவாரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.