

மன்னார்குடியில் தங்க குதிரை வாகனத்தில் ராஜகோபால சுவாமி உலா
மன்னார்குடியில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி தங்க குதிரையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. முக்கிய விழாவான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று காலை நடைபெற்ற நிலையில் இரவு ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் தங்க குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வெண்ணெய் தாழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காசுக்கர செட்டி தெருவை மூன்று முறை வலம்வந்த ராஜகோபால சாமி யானை வாகன மண்டபத்திற்கு சென்று அங்கிருந்து கோவிலை அடைந்தார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.