மன்னார்குடி - Mannargudi

மன்னார்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடி பதவி விலக வலியுறுத்தி மன்னார்குயில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம். இந்து மதத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியின் செயலை கண்டித்தும் உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். மன்னார்குடி பெரியார் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் அமைச்சர் பொன்முடியின் பேச்சை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் பொன் முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


திருவாரூர்