சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவரை தாக்கிய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் மருத்துவமனைகளில் ஆயுதம் இந்திய காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் அரசு மாற்றும் தனியார் மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.